வியாழன், 27 ஆகஸ்ட், 2009

உன் நிறம் அறிந்தேன்...

நாகத்தின் படத்தின் அழகைக் கண்டு, மயங்கினேன். கம்பீர நடை, சான்று ஒட்டி பேசும் தோரனை, குரலில் ஒருவித மறைமுகக் கொஞ்சல் அனைத்தும் உன் அரிதாரம் தானா?
இனிக்க இனிக்க பேசிய உன் உதடு தீப் பொரியை வாரி இரைக்கும் சூளை என்று நிருபனம் செய்துவிட்டாய்.
பிற ஆண்கள் போல நீ கீழ்த்தனமாக இருந்து கொண்டு, எம் வர்க்கத்தையே தூத்துவது ஏனடா? குறைக் கொண்ட நீ சிறிதளவும் ஒப்புக்கொள்ளாமல் எம்மை மட்டும் சாடுவது சரியா? பக்குவம் அடையாத உன் மனதைக் ,கருங்கல் போல பீடிகை போடுவது உன் விவேகமா? பலவினமா?

திங்கள், 2 மார்ச், 2009

மனதை வருடும் ஏகாந்த வேலை

பலநாள் ஆசை என்னை புதுப்பிக்க தொடங்கின, எமது விரல்கள் மெட்டை தழுவ இசை எமது நினைவுகளை துயில் எழுப்பியது. எத்தனை நாட்கள் தான் மூடிப்பபோட்டு வைக்க முடியும் பாரமான நினைவுகளை? பசு அவசர அவசரமாக புல்லை தின்றுவிட்டு , பின் ஒரு இடதில் அமர்ந்து அசை போடுவதை போல நான் எமது இதயத்தை பாரமாய் செய்த சில விஷயங்களை அசை போடும் தவதருணம் இது. ஏகாந்தமான என் வாழ்கையில் இந்த ஏகதந்திதான் என் தோழமை தாகத்தை திர்த்து வருகிறது . தனிமையில் சுகம் காணும் ஒரு ஜீவனாயிற்றேன் .
பாமர மக்களில் இருந்து பட்டயம் வாங்கியவர் வரை அறியாமை எனும் மடமயில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இறைத்தன்மை எனும் ஆழமான அறிவை உணர மடமையான செயல்களில் சிக்கித் தவிக்கிறார்கள். தவறான குருமார்களை அறியாமயினால் தேர்வு செய்து , ஆஹா ஒஹோ என புகழ்வார்கள் தமது குரு மார்களை. இல்லாத , கண்களுக்கு தென்படாத உண்மையைத் தேடி செல்வதே இறைப்பயணம். தன்னுள்ளே கடவுள் இருக்கும் பச்சத்தில் எங்கெங்கோ தேடி அலைகிறார்கள் அற்ப மானிடர்கள்.
சிலர் பேசும் பேச்சை கேட்டால் வேடிக்கையாக இருக்கும். ஒரு அழகிய காலை பொழுது , பள்ளி மின் மணி ரீங்காரத்தை எழுப்பியது. அனைவரும் விருவிருவென சிற்றுண்டி சாலையை நோக்கி விரைந்தனர். நானோ எமது நண்பன் கோபிவுடன் மகிலம்பூ மரத்தடிக்கு சென்றோம் வீட்டில் அம்மா கொடுத்த அனுப்பிய உணவை உற்கொண்டோம் . எப்பொழும் போல என்னை பாட சொல்லும் கோபி அன்றும் அவ்வாரே செய்தான். அத்தருணம் அவிழ்த்து விட்ட காயைப்போல திபுதிபுவென ஒடிவந்து பலகை இருக்கையின் மேல் அமர்ந்தன. வாணர கூட்டமே வந்து கூத்தாடுவதை போல அமைந்தது அக்காட்சி..
அக்கும்பலில் ஒருவன் தெய்வ வம்சதை நினைத்தவன் போல பேச்சை எழுப்பினான். கூறும் அனைத்து உறவுமுறைகளுமே தவறு .எடுத்து காட்டாக கண்ணனின் அக்காள் காட்டேரியாகவும், முருகனின் நண்பன் ஏசுநாதர் அன்றும் பெருமையுடன் மார்த்தட்டி சொல்லி கொண்டிருந்தான். இதை ஆவலுடன் கேட்டறிய ஒரு கோஷ்டி. இக்கூற்றை திருத்தச் சொல்லி என்னை கோபி ஜாடை காட்டினான். நான் அவனை கண்டு நகைத்து மௌனம் காத்தேன். தெய்வங்களுக்கு உறவு முறைகளே இல்லை, அனைத்தும் மானிட அறிவுக்கு ஏற்றவாறு அமைத்து கொண்டவைதான்.

வெள்ளி, 16 ஜனவரி, 2009

பொங்கல் திருநாள் யாருடையது?



தமிழர் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் பிரதானமானது தைப்பொங்கல் . தமிழர் மற்றும் இன்றி மற்ற இந்தியர்கலளும் இப்பண்டிகயை இந்தியா முழுவதும் வெவ்வேரு பெயர்களில் மிக விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். பொங்கலை சொந்தம் கொண்டாடும் பல இந்திய வம்சத்தினரும் இருக்கவே செய்கிறார்கள். தென் இந்தியாவில் இப்பொங்கல் விழா மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது; தைப்பொங்கல் , மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல்.
வட இந்தியாவில் மகரசங்கராந்தி என்று இப் பொங்கல் விழாவை அழைகிறார்கள். பஞ்ஜாப்பில் லொஹரி பண்டிகை , பொங்கலுக்கு ஒரு நாள் முன்பு அதாவது போகி பண்டிகயை மிக விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. சக்கரைப் பொங்கல் போல ஒரு வகையான உணவு செய்து இத்திருநாளை கொண்டாடுகிறார்கள். பஞ்ஜாபில் பாலுக்கு பதிலாக கரும்பு சாற்றில் அரிசி இட்டு , வெந்ததும் நெய், முந்திரி, ஏலக்காய் அகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது.
சங்க காலத்தில் தமிழர்கள் இந்திர விழாவாகிய போகி பண்டிகயை மிக விமரிசையாக கொண்டாடியதாக சிலப்பதிகாரத்தில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மாதவியை விட்டு கோவலன் பிரிந்த சம்பவம் இந்நாளில்தான் நிகழ்ந்தது. இவ்விழா வருண தேவனுக்கு நன்றி கூறும் விழாவாகும். இக்காலத்தில் இப்பண்டிகை மலைவாசிகள் மட்டுமே கொண்டாடி வருகிறார்கள்.
இப் பண்டிகை எங்களுடையது எங்களுடையது என்று கூறுவதிற்கு முன்பாக, சரிதிரத்தையும் , காப்பியங்களையும் ஒரு முறை புரட்டுங்கள். விடை தெரியும்.

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

பெண்ணியம் பேசும் பேயிணம்

ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் இறைவன் படைத்தான் என்று சான்றோர்கள் கூறுவார்கள். பெண்ணியத்தைப் புகழ்ந்து பேசும் எல்லா ஆண்களும் பெண்களை உயர்வாக நினைப்பதில்லை, மாறாக பெண்களை வெறும் வாரிசு பெரிக்கிகலாகதான் நினைகிறார்கள். தேவைப்படும் பொழுது மட்டும் பெண்ணிடம் காரியத்தைச் சாதிக்கும் ஈன ஆண் வர்கமும் இன்று வரையில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆண் என்பவன் பெண்ணினத்தைப் பேணி காக்கும் கடமையை இயற்கையாகவே பெற்றிருப்பான் இந்தியனாக ஜனித்திருத்தால். சிறு வயதில் தந்தையின் அரவணைப்பில், பூப்படைந்ததும் சகோதரன் கண்காணிப்பில், மணந்ததும் கணவனின் கட்டளைக்கு இணங்க அவளின் ஆசா பாசங்களைத் தாரைவார்க்கிறார்கள். கைம்பெண் ஆனதும் ஆண் பிள்ளையிடம் தஞ்சம் புகுந்து இறைவனின் எல்லையைக் காணும் நாட்களை எண்ணி கொண்டிருப்பார்கள். இக்கூற்றை விட வேறு என்ன வேண்டும் ஆணின் கடமையைப் பறைச்சாற்ற. கடமை என்னும் ஆதிகாரத்தில்தான் ஆண்கள் நடை போடுகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
சில ஆண்கள், பெண்கள் தன்னுடைய அனைத்து ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று எண்ணம் வளர்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பெண்களை மிக துச்சமாக நினைக்கும் ஆண்களும் ஜீவித்துகொண்டுதான் இருக்கிறார்கள். எதுவரை செல்லும் இந்த பேய்களின் ஆதிக்கம்?